Maalaimalar
சட்டசபை தேர்தலுக்கு 6 மாதத்துக்கு முன்பே வேட்பாளர் அறிவிப்பு: சீமான் பேட்டி
தஞ்சாவூர், மே. 24–
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரது மனைவி கயல்விழியுடன் இன்று தஞ்சை வந்தார். தஞ்சை பெரிய கோவில் அருகில் உள்ள மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்தார். பெரிய கோவிலுக்கு சென்று வழிபட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
வருகிற சட்ட மன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என ஏற்கனவே அறிவித்து உள்ளோம். அதில் எந்த மாற்றமும் இல்லை.
வேட்பாளர்கள் தேர்தல் நடைபெறுவதற்கு 6 மாதத்திற்கு முன்பே அறிவிக்கப்பட்டு விடுவார்கள். அதன் மூலம் தேர்தல் பணியை முன்கூட்டியே தொடங்குவதற்கு வாய்ப்பாக அமையும்.
தஞ்சை பெரிய கோவிலை சாய்க்க மாபெரும் சதி நடைபெற்று வருகிறது. கோவிலின் உட்பகுதியிலே கருவறைக்கு மிக அருகாமையில் ஆழ்துளை கிணறு அமைக்க 250 அடி வரை துளை போடப்பட்டு பின்னர் மக்கள் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மீத்தேன் வாயுதிட்டத்தால் சோழ மண்டலத்தில் உள்ள பழமையான அனைத்து தமிழர் கோவில்களுக்கும், விளை நிலங்களுக்கும் ஆபத்து வரும் நிலை உள்ளது.
இதற்கு காரணம் தஞ்சை பெரிய கோவிலும் இன்னும் பிற தமிழ் கோவில்களும் இன்று வரை அன்னியரின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.
திராவிட அரசுகள் கோவிலின் உரிமைகளை அன்னியரிடம் இருந்து மீட்டு தமிழர்களின் கைகளில் ஒப்படைக்க எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.
இவர்கள் கோவிலின் முன் வாயில் வழியாக கூட நுழைய அஞ்சுகிறார்கள். நாங்கள் கோவில் முன் வாயில் வழியாக உள்ளே சென்று பெருமிதத்துடன் வணங்கி வாழ்த்து பெற்று இன்று திருச்சியில் நடைபெறும் தமிழ் இன எழுச்சி அரசியல் மாநாட்டிற்கு செல்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது நாம் தமிழர் கட்சி மாநில பொது செயலாளர் வக்கீல் தன. சந்திரசேகர், மாநில பொறுப்பாளர் சாகுல் அமீது, மண்டல ஒருங்கிணைப்பாளர் வக்கீல் நல்லத்துரை, தஞ்சை மாவட்ட செயலாளர் குமார்,துணை செயலாளர் ராம்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
0 comments:
Post a Comment