மாலைமலர்
நடிகர் சங்க தேர்தல் பிரச்சனையில் அரசு தலையிட வேண்டும்: சீமான் பேட்டி
திருச்சி, ஜூன் 20–
திருச்சியில் கடந்த மாதம் 24–ந்தேதி நாம் தமிழர் கட்சியின் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 40 பேர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியது உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் சீமான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி திருச்சி கோர்ட்டில் ஆஜராகி பின்னர் எடமலைப்பட்டி புதூர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கினார். இதை தொடர்ந்து நேற்று சீமான் தரப்பினர் கோர்ட்டில் ஆஜராகினர்.
இதை தொடர்ந்து இன்று சீமான் மற்றும் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு உள்பட 36 பேர் இன்று திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர். பின்னர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:–
இலங்கையில் இறுதி கட்ட போரின் போது வெள்ளை கொடியுடன் சென்று சரணடைந்த 320 பேரை சுட்டு கொன்றதற்கு மத்திய அரசு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலையொட்டி தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனையை அந்த துறை சார்ந்த அமைச்சர் தலையிட்டு சுமூக நிலைக்கு கொண்டு வர வேண்டும்.
மதுவை ஒழிக்க வேண்டும் என்று நாங்கள் போராடுகிறோம். ஆனால் வைகோ மது விற்பனையை தொடங்கிய தி.மு.க.விடம் தற்போது கூட்டணி சேரும் நிலை உள்ளது. அவருக்கும் எங்களுக்கும் கொள்கை முரண்பாடு உள்ளதால் அவருடன் கூட்டு சேர வாய்ப்பு இல்லை. அதனால் வரும் சட்ட மன்ற தேர்தலை தனியாக சந்திப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")
News | நடிகர் சங்க தேர்தல் பிரச்சனையில் அரசு தலையிட வேண்டும்: சீமான் பேட்டி
Views:
Category:
0 comments:
Post a Comment