Source 1 -YouTube
Source 1 -Dailymotion
காங்கிரஸ், பா.ஜ.க.வை வீழ்த்தும்,
முக்கிய கருவி இரட்டை இலை!
நெல்லையில் செந்தமிழர் சீமான் தேர்தல் பரப்புரை!!
முக்கிய கருவி இரட்டை இலை!
நெல்லையில் செந்தமிழர் சீமான் தேர்தல் பரப்புரை!!
காங்கிரஸ், பா.ஜ.க.வை வீழ்த்தும் கருவி இரட்டை இலை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நெல்லையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் தெரிவித்தார்.
நெல்லை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பிரபாகரனை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வள்ளியூர்,சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு தெரிவித்து தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, நாம் தமிழர் கட்சியின் தேர்தல் நிலைப்பாடு'என்ற தலைப்பில், பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் செந்தமிழர் சீமான் பேசும் போது, காங்கிரஸ் கட்சி இப்போது 10 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்போம் என தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. பத்தாண்டுகால ஆட்சியில் அதனை செய்து முடிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். ஆட்சி, அதிகாரத்தில் இல்லாதபோதுதான் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தமிழர்கள் மீதான அக்கறை அதிகரிக்கிறது. அவரது முதல் முதலீடே, மக்களின் மறதிதான். எனவே, அவருக்கு அதிகாரம் கிடைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மக்களின் கடமை என்று தெரிவித்தார்.
மேலும், கச்சத்தீவு மீட்பு, தஞ்சை மீத்தேன் எரிவாயுத் திட்டம் போன்றவற்றில் பா.ஜ.க.வின் நிலைபாடு என்ன என்பது இதுவரை தெரியவில்லை. இந்திய முதலாளிகள் அந்நிய நாட்டு வங்கிகளில் பணத்தைச் சேர்ப்பதும், அந்நிய நாட்டு முதலாளிகள் இந்தியாவில் முதலீடு செய்து வளங்களைச் சுரண்டுவதும் தொடர்கதையாகி வருகிறது என்று தெரிவித்த செந்தமிழர் சீமான், காங்கிரஸ், பா.ஜ.க., தி.மு.க.வை வீழ்த்தும் கருவி இரட்டை இலை மட்டுமே. இலங்கையை நட்பு நாடு என்று அழைக்கக்கூடாது என வலியுறுத்திய வலிமை கொண்டவர் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா என்று பெருமையுடன் தெரிவித்தார்.

Seeman speech at Palayamkottai for 2014 election campaign 8 April 2014
Views:
Karunanithi is the root for all deaths at MULLIVAIKKAL in Eellam, such a bastard should never be allowed to raise his head .Who is this rascal for our Eellam Tamils .Tamils all over the world should remember this killings.I am an Eellam Tamil.
ReplyDelete