திருச்சியில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத் தில் நாம் தமிழர் கட்சி ஆற்றிய பணிகள் மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு சென்றடைந்துள்ளது என்பதை அறிந்துகொள்ளவும், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆயத்தமாகவும் இந்த மாநாடு விளங்கும்.

திராவிட கட்சிகளுக்கு மாற்றாக வேறு கட்சியைப் பற்றி மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும். எங்கள் கட்சியுடன் ஒத்த கருத்துடைய கட்சிகள் இணைய விரும் பினால் அவர்களை வரவேற்போம்.

கடந்த ஓராண்டில் மத்திய அரசு செயல்பட்டிருந்தால்தானே ஊழல் நடைபெற்றதா இல்லையா என்பது தெரியவரும். இருப்பினும் எவ்வித ஊழல் புகாரும் இல்லை என்பதை வரவேற்கிறேன் என்றார்.