Oneindia Tamil
நடிகர் சங்க விவகாரம்: சரத்குமாருக்கு சீமான் பாராட்டு!
திருச்சி: நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் நல்ல உழைப்பாளி. அவர் நிறைய நல்ல காரியங்களை சிறப்பாக சங்கத்திற்காக செய்துள்ளார் என்று பாராட்டியுள்ளார் இயக்குநரும் நாம் தமிழர் கட்சித் தலைவருமான சீமான்.
கடந்த மே 24ஆம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில், திருச்சியில் இன எழுச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 40 பேர் மீது எடமலைப்பட்டி புதூர் காவல்நிலையத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
Vikatan
சரத்குமார் சிறந்த உழைப்பாளி: சீமான் பாராட்டு!
திருச்சி: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரையே மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் சங்கத்தில் சரத்குமார் நல்ல உழைப்பாளி என்று பாராட்டினார்.
கடந்த மே 24ஆம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில், திருச்சி எடைமலைபட்டி புதூரில் இன எழுச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 40 பேர் மீது எடமலைப்பட்டி புதூர் காவல்நிலையத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஜாமீன் கேட்டு, கடந்த சில நாட்களுக்கு முன் சீமான் உள்ளிட்டவர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுவை விசாரித்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தார். இதைத் தொடர்ந்து இன்று காலை சீமான் உள்பட 40 பேர் திருச்சி ஜே.எம்.2 நீதிமன்ற நீதிபதி முரளீதரக்கண்ணன் முன்பு, தங்களது வழக்கறிஞர்கள் தடா சந்திரசேகர், விஜயன், பிரபு உள்ளிட்டோருடன் ஆஜரானார்கள்.
நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்து வெளியில் வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "இந்திய இறையான்மைக்கு எதிராக பேசியதாக 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநாட்டில் இலங்கையில் ஈழத்தமிழர்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்றால் அதற்கு தனி ஈழம் தான் வழி என்றும், இதற்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் பேசினேன். இதே கருத்தை வலியுறுத்தி தனி ஈழம்தான் தீர்வு என தமிழக சட்டசபையிலும் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். ஆனால் எங்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் நன்றி, வணக்கம் என பேசியவர்கள் மீதும் காவல்துறை தேசதுரோக வழக்கு போட்டுள்ளார்கள். சீமான் பின்னால் சென்றால் வழக்கு போடப்படும் என்ற அச்சுறுத்தலின் பேரிலேயே இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. அதனை நாங்கள் சட்டப்படி சந்திப்போம் " என்றார்.
பின்னர், செய்தியாளர்கள் அவரிடம், கடந்த இரு தேர்தல்களில் அ.தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம் செய்தீர்களே? என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த சீமான், "நாங்கள் அ.தி.மு.க.விற்காக எங்கும் பிரசாரம் செய்யவில்லை. ஈழ மக்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ், பிஜேபி கட்சிகளுக்கு எதிராக பிரசாரம் செய்தோம். வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பிஜேபி உள்ளிட்ட கட்சிகளை எதிர்த்து எங்கள் கட்சி சார்பில் தேர்தல் பிரசாரம் செய்வோம். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை பொறுத்தவரை நாங்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். அப்படியானால் அண்ணன் மகேந்திரனுக்கு எமது கட்சியினர் வாக்களிப்பார்கள். ஆனால் பிரசாரம் செய்யமாட்டோம்.
இதேபோல் இடைத்தேர்தலில் போட்டியிடாத திமுக, தேமுதிக, பாமக, மதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் ஆதரவு யாருக்கு என்பதை அறிவிக்க வேண்டும். அப்படியானால் அவர்களின் கட்சிக்காரர்களின் ஓட்டு யாருக்கு போட வேண்டும். மகேந்திரனுக்கா, டிராபிக் ராமசாமிக்கா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்" என்றார்.
நடிகர் சங்க தேர்தல் குறித்த கருத்து தெரிவித்த சீமான், "தென்னக நடிகர் சங்க தேர்தலை பொறுத்தவரை, முதலாவதாக அந்த சங்கத்தின் பெயரையே மாற்ற வேண்டும். கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தனியாக சங்கங்கள் செயல்படுகிறது. ஆனால் இங்குள்ள சங்கம் மட்டும் தென்னக நடிகர்கள் சங்கம் எனும் பெயரில் உள்ளது. மற்ற மாநிலங்களில் தமிழக நடிகர்கள் உறுப்பினர்களாக சேரலாமே ஒழிய தேர்தலில் போட்டியிட முடியாது. தமிழகத்தை பொறுத்தவரை நடிகர் சங்கத்தில் சரத்குமார் நல்ல உழைப்பாளி. அவர் நிறைய நல்ல காரியங்களை சிறப்பாக சங்கத்திற்காக செய்துள்ளார். தற்போது கட்டடம் கட்டுவதில்தான் பிரச்னை. தொடர்ந்து நாடக நடிகர்களை சங்கத்தில் இருந்து நீக்க நினைப்பது தவறு. காரணம் நாடக நடிகர்களாக இருந்தவர்கள்தான் கொடிகட்டி பறந்த ஊர் இது. உதாரணமாக சிவாஜி, எம்.ஆர்.ராதா உள்ளிட்டவர்களை சொல்லலாம். ராதாரவி நாடக நடிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அந்த ஓட்டு அவருக்கு போகும் என்பதால் இதுபோன்ற விசயங்களில் ஈடுபடலாம். அதுதவறு.
இந்தியாவில் நெருக்கடி நிலை வரும் என்று அத்வானி கூறிய கருத்து, யாரை குறித்து பேசினார், எதை மனதில் வைத்து பேசினார் என்பதை அவர்தான் கேட்டு தெளிவுப்படுத்த வேண்டும். அவர் மோடியின் தனிமனிதரை முன்னிலைபடுத்துவதில் இருந்து சொல்லியிருக்கலாம். அதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும் ' என்றார்.
யோகாவில் சூரிய நமஸ்காரம் செய்வது சர்ச்சையாகி வருகிறதே என்கிற கேள்விக்கு, "சூரிய நமஸ்காரம் என்பது அவரவர் விருப்பதை பொறுத்தது. அதற்கு மத சாயம் பூசாதீர்கள், யோகா செய்ய அவரவர்கள் தங்கள் விருப்பபடி பிடித்த வசனங்கள், பாட்டு என எதை வேண்டுமானாலும் போட்டுக்கொண்டு யோகா செய்யலாம்" என்றார்.
மீண்டும் இன்று மதியம் 2 மணிக்கு நீதிமன்றத்தில் சீமான் ஆஜரானார். நாளையும் நீதிமன்றத்தில் சீமான் கையெழுத்திட வேண்டி உள்ளதால் திருச்சியில் தங்கியிருக்கிறார்.
If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")
NEWS | நடிகர் சங்க விவகாரம்: சரத்குமாருக்கு சீமான் பாராட்டு !
Views:
Category:
0 comments:
Post a Comment