Wednesday, 24 June 2015
Tamilsvoice
நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுவில் 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்
நாம் தமிழர் கட்சியின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் 14-06-15 அன்று கூடுவாஞ்சேரி, என்.பி.ஆர்.திருமண அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தார்.அவை பின்வருமாறு:
நாகர்கோவில் – கா.கலைக்கோட்டுதயம், தமிழன் தொலைக்காட்சி நிறுவனர் சிவகங்கை – வழக்கறிஞர் எழில்குமரன்
திருவாடனை -வழக்கறிஞர் ராஜீவ்காந்தி என்கிற அறிவுச்செல்வன் சோழிங்கநல்லூர் – வழக்கறிஞர் இராசன்
திருப்பத்தூர் – கோட்டைக்குமார், திரைப்படத் தயாரிப்பாளர்
மைலம் – மருத்துவர் விஜயலெட்சுமி
அம்பத்தூர் – அன்புத்தென்னரசன்
கவுண்டம்பாளையம் – இயக்குனர் கார்வண்ணன்
கும்பகோணம்- வழக்கறிஞர் மணி செந்தில்
If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")
NEWS | நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுவில் 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்
By: Unknown on: 21:24Saturday, 20 June 2015
Naamtamilar
செல்லும் இடமெல்லாம் தமிழனைக் கொல்லும் சூழலா? — சீமான் வேதனை
If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")
NEWS | செல்லும் இடமெல்லாம் தமிழனைக் கொல்லும் சூழலா? — சீமான் வேதனை
By: Unknown on: 15:21Dinamani
இலங்கை அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்
Maalaimalar
ராசிபுரத்தில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்
If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")
NEWS | இலங்கை அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்
By: Unknown on: 15:15Maalaimalar
இந்தோனேசியா தீவில் தவிக்கும் தமிழர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான் கோரிக்கை
சென்னை, ஜூன் 10Oneindia
தீமோர் தீவில் தவிக்கும் ஈழத் தமிழர்களை காப்பாற்றுங்கள்... சீமான்
Nellaionline
தீமோர் தீவில் தத்தளிக்கும் தமிழர்களைக் காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை: சீமான் வலியுறுத்தல்
If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")
NEWS | இந்தோனேசியா தீவில் தவிக்கும் தமிழர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான் கோரிக்கை
By: Unknown on: 15:10Dailythanthi
நடிகர் ஜெயராம் வீட்டை சேதப்படுத்திய வழக்கில் சீமான் உள்பட 14 பேர் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள்.
Dinamani
நடிகர் ஜெயராம் வீடு மீது தாக்குதல் வழக்கு: திருவள்ளூர் நீதிமனறத்தில் சீமான் ஆஜர்
If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")
NEWS | நடிகர் ஜெயராம் வீட்டை சேதப்படுத்திய வழக்கில் சீமான் உள்பட 14 பேர் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்
By: Unknown on: 15:04Wednesday, 3 June 2015
Viruvirupu
சீமான் ஆவேசம்: “இறந்த தலைவருக்கு வீர வணக்கம் செய்யாதவன் மனிதனே அல்ல”
வரும் 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதென சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடந்த கட்சியின் முதல் பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், தேர்தலில் போட்டியிடுவது என்பது தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், “இறந்த தலைவர்களுக்கு வீரவணக்கம் செய்வது என்பதே அவர்களுக்கு கொடுக்கப்படும் உயர்ந்த மரியாதை” என்று தெரிவித்துள்ள சீமான், “இனத்துக்காக போராடிய பெருந்தகைகளுக்கு மரணத்தின் பின் வீரவணக்கம் செலுத்தாதவன் உண்மைத் தமிழன் அல்ல என்பதற்கு மேலாக, அவன் மனிதனே அல்ல. கீழ்த்தரமான அவனை சரித்திரம் மன்னிக்காது” எனவும் கூறியுள்ளார். சீமான் நிறைவேற்றிய தீர்மானத்தில், “நமது தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களால் சர்வதேசப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, சீரிய வகையில் செயல்பட்டு இனத்தின் விடுதலையை இராஜதந்திர வழிகளில் முன்னெடுத்து சிறப்பாக செயலாற்றி வந்த நிலையில், இன எதிரிகளின் சதியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பரிதி என்கிற மதீந்திரன் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி வீர வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. தமிழ் இனத்தின் மேம்பாட்டிற்காகவும், தமிழ் மொழியைக் காக்கவும் தங்கள் வாழ்நாள் நெடிகிலும் இடைவிடாது போராடி மறைந்த எனது இனத்தின் பெருமைக்குரிய முன்னோடிகளான பெருந்தமிழர் இறைக்குருவனார், மருத்துவப் பெருந்தகை, கொடையாளர் அய்யா தெய்வநாயகம், பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் துணைவியார் அம்மா தாமரை ஆகியோருக்கும் நாம் தமிழர் கட்சி வீர வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறது” என்று கூறப்பட்டுள்ளது. சீமான் கூறிய “இனத்துக்காக போராடிய தலைவனுக்கு வீரவணக்கம் செய்யாதவன் மனிதனே அல்ல” என்ற கூற்று சூப்பர்! இனத்துக்காக போராடியவர்களை கேவலம் பணத்துக்காக வீரவணக்கம் செய்யாமல் அநாதைப் பிணமாக விட்ட நபர்களுக்கு (சீமான் வாக்கியத்தில்: கீழ்த்தரமானவர்களுக்கு) இதைவிட செம அடி யாரும் கொடுக்கவே முடியாது!!If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")
சீமான் ஆவேசம்: “இறந்த தலைவருக்கு வீர வணக்கம் செய்யாதவன் மனிதனே அல்ல”
By: Unknown on: 14:59Viruvirupu
சீமான் சவால்: கருணாநிதி பற்றி நான் சொல்கிறேன்! ஜெயலலிதா பற்றி நீங்க சொல்லுங்க!!
தி.மு.க. தலைவர் கருணாநிதி செய்வது ‘கபட நாடகம்’ என்று கண்டுபிடித்து மக்களுக்கு தெரிவித்துள்ள சீமான், முதல்வர் ஜெயலலிதா செய்வது என்ன என்பதை, நீங்களாக பார்த்து முடிந்தவரை புரிந்து கொள்ளுங்கள் என மக்கள் தலையில் அந்தப் பொறுப்பை போட்டு விட்டுள்ளார். சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சீமான், “சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை தி.மு.க. எதிர்ப்பதாக கூறியது. ஆனால், நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் அந்த முடிவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பில் தி.மு.க. உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தனர். அதுதான், அக்கட்சித் தலைவர் கருணாநிதி நடத்திய கபட நாடகம். டில்லியில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு, இங்கு சென்னையில் வால்மார்ட் நிறுவனம் கட்டிவரும் கட்டடத்தை தடுத்து நிறுத்துமாறு தமிழக அரசுக்கு கருணாநிதி கோரிக்கை விடுக்கிறார். இது, தொட்டிலை ஆட்டுவதற்கு பிள்ளையை கிள்ளிவிடுவது போன்ற மோசடி அரசியல்” என்று தி.மு.க.வை பிடிபிடியென்று பிடித்தார். ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசை விமர்சித்தபோது, ‘கபட நாடகம்’, ‘கடும் மோசடி நட்டுவாங்கம்’ போன்ற சொற்பதங்கள் மிஸ்ஸிங்! “தமிழக அரசு, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை எதிர்ப்பதில் நேர்மையாகவும் இருக்குமானால், சென்னையில் வால்மார்ட் நிறுவனம் கட்டடம் கட்ட அனுமதிப்பது ஏன்?” என்று கேள்விதான் கேட்டார். “அனுமதித்தது தமிழக அரசின் மோசடிச் செயல்” என்றெல்லாம் சொல்லி, சிக்கலில் மாட்டிக் கொள்ளவில்லை. “கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடி வரும் மக்களுக்கு ஆதரவாக இருப்பேன் என்று கூறிவிட்டு, சங்கரன் கோயில் இடைத்தேர்தல் முடிந்த மறுநாளே அணு உலை செயல்படுவதற்கான ஆதரவு தந்ததுபோல், சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை இப்போது எதிர்க்கும் தமிழக முதல்வர், தனது முடிவை மாற்றிக்கொண்டு ஆதரிப்பாரா என்கிற ஐயம் ஏற்படுகிறது” என்றும் சொன்னார் சீமான்! அடடா, பாவம், அவருக்கு ஐயம்தான் ஏற்பட்டிருக்கிறது. இன்னமும் உறுதியாக தெரியவில்லை. “நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை, வால்மார்ட் உள்ளிட்ட பன்னாட்டு சில்லரை வர்த்தக நிறுவனங்கள் எதுவும் தமிழ்நாட்டில் கால் பதிக்க விடமாட்டோம். அவற்றை எதிர்த்து நாங்கள் போராட்டம் நடத்தும்போது தமிழக அரசு என்ன செய்கிறது என்பதைப் பொறுத்து, அதனுடைய நேர்மையை தமிழக மக்கள் புரிந்துகொள்வார்கள்” என்று டிசிஷன் பாக்டரை, மக்கள் தலையில் போட்டு விட்டார். அதன் அர்த்தம் என்னவென்றால், கருணாநிதி ஒன்றை சொல்லிவிட்டு, அதற்கு எதிரான செயலை செய்தால், அது கபட நாடகம் என்று சீமானே கண்டுபிடித்து மக்களுக்கு சொல்லி விடுவார். ஆனால், ஜெயலலிதா ஒன்றை சொல்லிவிட்டு, அதற்கு எதிரான செயலை செய்தால், மக்கள் சொந்தமாகவே புரிந்துகொள்ள வேண்டியதுதான். உங்களுக்கு சொல்வதற்கு செந்தமிழன் சீமான் வரமாட்டார்!If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")
சீமான் சவால்: கருணாநிதி பற்றி நான் சொல்கிறேன்! ஜெயலலிதா பற்றி நீங்க சொல்லுங்க!!
By: Unknown on: 14:48Tuesday, 26 May 2015
Deccan Chronicle
Tiruchy: Tension prevailed for a while at different places in the city in the wee hours of Sunday, when a group of volunteers of the Naam Tamilar Katchi objected to the police action of removing the party’s flex hoardings, carrying the portraits of the banned LTTE chief Velupillai Prabhakaran, erected by them here.
The flex hoardings were erected in connection with the party’s state conference being held on Sunday evening at suburban Panchapur in which the party’s founder Seeman and others are scheduled to speak.
Police told the agitators that they were removing only the unauthorised flex hoardings and not those hoardings, which were put up with permission. After this, the agitators dispersed peacefully. A later report said that vehicular traffic on the busy Pudukkottai-Rameswaram National highway was paralysed for about an hour as a section of volunteers of ‘Naam Tamilar Katchi’ blocked the road by parking their vehicles near the NHAI’s toll plaza at Thirumayam, refusing to pay toll on Sunday. They were on their way to Tiruchy to attend their party’s meet.
If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")
News | Deccan Chronicle | Police remove Prabhakaran hoardings in Tiruchy | 25 May 2015
By: Unknown on: 20:04Dinamalar
நாம் தமிழர் கட்சியினர் மீது போலீஸ் வழக்கு
விருத்தாசலம் : அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய, நாம் தமிழர் கட்சியினர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பஸ் நிலையம் அருகே 'இன எழுச்சி அரசியல் மாநாட்டிற்கு திருச்சியில் கூடுவோம்' என்ற வாசகங்களுடன், நாம் தமிழர் கட்சி சார்பில் அச்சகம் பெயரின்றி அனுமதியின்றி போஸ்டர்கள் ஒட்டியிருந்தன.இதுதொடர்பாக, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தென்றல் மணி, மரியஜோசப், நித்யானந்தன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்
If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")
NEWS | Dinamalar | நாம் தமிழர் கட்சியினர் மீது போலீஸ் வழக்கு | 24 May 2015
By: Unknown on: 20:01Daily Thanthi
அப்பாவி தொழிலாளர்களை சுட்டுக்கொன்ற ஆந்திர அரசு அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் நாம் தமிழர் கட்சி மாநாட்டில் தீர்மானம்
அப்பாவி தொழிலாளர்களை சுட்டுக்கொன்ற ஆந்திர அரசு அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்சியில் நடந்த நாம் தமிழர் கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாம் தமிழர் கட்சி மாநாடு
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி அரசியல் மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டிற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். மாநாட்டின் தொடக்கமாக இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாநாட்டு மேடை அருகில் கட்சி கொடி ஏற்றப்பட்டது. தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜோதி ஏற்றி வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மாநாட்டு மேடை அருகில் வைக்கப்பட்டு இருந்த தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் திருவுருவ படத்திற்கு சீமான் மற்றும் கட்சியின் முன்னணி தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
தடையை நீக்க வேண்டும்
* தனி ஈழம் மட்டுமே ஒவ்வொரு தமிழருக்குமான தாயக விடுதலை. தமிழ் தேசியத்துக்கான விடுதலையும் அதுவே. ஒரே இலங்கைக்குள் ஒற்றை ஆட்சிக்குள் வாழ்கிறீர்களா? அல்லது தனித் தமிழீழமாக மீள்கிறீர்களா? என கேட்டு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதற்கு இந்தியா குரல் கொடுக்க வேண்டும். இன அழிப்பு போரில் ஈடுபட்ட இலங்கை ராணுவத்தினர் மீதும், ராஜபக்சே மீதும் சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இன விடுதலைக்காக போராடிய விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும். தமிழகத்தில் விடுதலைப்புலிகள் மீதான தடையை ரத்து செய்ய முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட வேண்டும்.
* முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு தண்டனை அடைந்த பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட ஏழு பேரை மத்திய, மாநில அரசுகள் மனசாட்சியோடு விடுதலை செய்ய வேண்டும். அவர்களை விடுதலை செய்வதற்கான முன்னெடுப்புகளை தமிழக அரசு தாயுள்ளத்தோடு மேற்கொள்ள வேண்டும்.
ஆந்திர அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை
* செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்டதாக கூறி 20 அப்பாவி தமிழர்களை சுட்டுக்கொன்ற ஆந்திர அரசு அதிகாரிகள் மீது இன்னமும் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டுவது உரிய நியாயத்துக்காக போராடும் ஒவ்வொரு தமிழர்களையும் கொல்வதற்கு சமமான கொடூரம் ஆகும். எனவே அப்பாவி தொழிலாளர்களை காட்டு மிராண்டித்தனமாக சுட்டுக்கொன்ற ஆந்திர அரசு அதிகாரிகள் அத்தனை பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபற்றிய நியாயமான விசாரணைக்கு மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
* தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த விவசாயத்தையே முடக்கி போடும் அளவிற்கு கர்நாடக அரசு அணை கட்டுவதற்கும், முல்லைப்பெரியாறு அணை அருகே கேரளா புதிய அணை கட்ட முயற்சிப்பதற்கும் மத்திய அரசு உடனடியாக தடை விதித்து தமிழக மக்களை காப்பாற்ற வேண்டும்.
மது விற்பனை கூடாது
* தமிழகத்தில் மது விற்பனையை அரசு உடனடியாக கைவிட வேண்டும். மத்திய அரசு கல்வி கொள்கையில் இந்துத்வாவை நுழைக்கும் முயற்சியை கைவிடவேண்டும். விவசாயிகளை பாதிக்கும் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும். கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும்.
மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")
News | Daily Thanthi | அப்பாவி தொழிலாளர்களை சுட்டுக்கொன்ற ஆந்திர அரசு அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் நாம் தமிழர் கட்சி மாநாட்டில் தீர்மானம் | 25 May 2015
By: Unknown on: 19:56Tamil Hindu
சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி: சீமான்
Published: May 24, 2015 08:44 ISTதிருச்சியில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத் தில் நாம் தமிழர் கட்சி ஆற்றிய பணிகள் மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு சென்றடைந்துள்ளது என்பதை அறிந்துகொள்ளவும், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆயத்தமாகவும் இந்த மாநாடு விளங்கும்.
திராவிட கட்சிகளுக்கு மாற்றாக வேறு கட்சியைப் பற்றி மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும். எங்கள் கட்சியுடன் ஒத்த கருத்துடைய கட்சிகள் இணைய விரும் பினால் அவர்களை வரவேற்போம்.
கடந்த ஓராண்டில் மத்திய அரசு செயல்பட்டிருந்தால்தானே ஊழல் நடைபெற்றதா இல்லையா என்பது தெரியவரும். இருப்பினும் எவ்வித ஊழல் புகாரும் இல்லை என்பதை வரவேற்கிறேன் என்றார்.
If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")
News | Tamil Hindu | சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி: சீமான் | 24 May 2015
By: Unknown on: 19:51News7 Tamil
நாம் தமிழர் கட்சியின் மாநாடு, அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தும் : சீமான் |24 May 2015
If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")
News | News7 Tamil | நாம் தமிழர் கட்சியின் மாநாடு, அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தும் : சீமான் |24 May 2015
By: Unknown on: 19:44Maalaimalar
சட்டசபை தேர்தலுக்கு 6 மாதத்துக்கு முன்பே வேட்பாளர் அறிவிப்பு: சீமான் பேட்டி
தஞ்சாவூர், மே. 24–
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரது மனைவி கயல்விழியுடன் இன்று தஞ்சை வந்தார். தஞ்சை பெரிய கோவில் அருகில் உள்ள மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்தார். பெரிய கோவிலுக்கு சென்று வழிபட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
வருகிற சட்ட மன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என ஏற்கனவே அறிவித்து உள்ளோம். அதில் எந்த மாற்றமும் இல்லை.
வேட்பாளர்கள் தேர்தல் நடைபெறுவதற்கு 6 மாதத்திற்கு முன்பே அறிவிக்கப்பட்டு விடுவார்கள். அதன் மூலம் தேர்தல் பணியை முன்கூட்டியே தொடங்குவதற்கு வாய்ப்பாக அமையும்.
தஞ்சை பெரிய கோவிலை சாய்க்க மாபெரும் சதி நடைபெற்று வருகிறது. கோவிலின் உட்பகுதியிலே கருவறைக்கு மிக அருகாமையில் ஆழ்துளை கிணறு அமைக்க 250 அடி வரை துளை போடப்பட்டு பின்னர் மக்கள் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மீத்தேன் வாயுதிட்டத்தால் சோழ மண்டலத்தில் உள்ள பழமையான அனைத்து தமிழர் கோவில்களுக்கும், விளை நிலங்களுக்கும் ஆபத்து வரும் நிலை உள்ளது.
இதற்கு காரணம் தஞ்சை பெரிய கோவிலும் இன்னும் பிற தமிழ் கோவில்களும் இன்று வரை அன்னியரின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.
திராவிட அரசுகள் கோவிலின் உரிமைகளை அன்னியரிடம் இருந்து மீட்டு தமிழர்களின் கைகளில் ஒப்படைக்க எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.
இவர்கள் கோவிலின் முன் வாயில் வழியாக கூட நுழைய அஞ்சுகிறார்கள். நாங்கள் கோவில் முன் வாயில் வழியாக உள்ளே சென்று பெருமிதத்துடன் வணங்கி வாழ்த்து பெற்று இன்று திருச்சியில் நடைபெறும் தமிழ் இன எழுச்சி அரசியல் மாநாட்டிற்கு செல்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது நாம் தமிழர் கட்சி மாநில பொது செயலாளர் வக்கீல் தன. சந்திரசேகர், மாநில பொறுப்பாளர் சாகுல் அமீது, மண்டல ஒருங்கிணைப்பாளர் வக்கீல் நல்லத்துரை, தஞ்சை மாவட்ட செயலாளர் குமார்,துணை செயலாளர் ராம்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")
News | Maalaimalar | சட்டசபை தேர்தலுக்கு 6 மாதத்துக்கு முன்பே வேட்பாளர் அறிவிப்பு: சீமான் பேட்டி | 24 May 2015
By: Unknown on: 19:41News7 Tamil
முதல்வர் சிறைக்கு சென்றால் வாய்ப்பு கிடைக்கும் என நினைப்பது ஜனநாயகமல்ல: சீமான்
தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறைக்கு சென்றுவிட்டால் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என நினைப்பது ஜனநாயகமல்ல என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் மாநில மாநாடு திருச்சியில் இன்று நடைபெறுவதையொட்டி அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தஞ்சாவூரில் மாமன்னன் ராஐராஐசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான், வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி தனித்துபோட்டியிடும் என்று கூறினார்.